Monday, 7 January 2013

ஒர் அறிமுகம் (Or Arimugam)

வணக்கம் சகோதரிகள் சகோதரர்களே! என்னுடைய Ph.D. ஆராய்ச்சிக்கு,  தமிழ் சொல்லிசையைப்  பற்றி  ஆய்வு செய்வதற்காக, கடந்த ஒரு வருஷமாக  மலேசியாவில் நான் தங்கியிருக்கிறேன் என்பது பலருக்கு ஏற்கனவே தெரியும். தமிழ் சொல்லிசையின் வினியோகம் மற்றும் உருவாக்க முறைகள், பாடல்வரிகளின் கருப்பொருள்  மற்றும் வெளிப்படையான மொழி, அதன் சமுக, பண்பாட்டு, பொருளாதார முக்கியத்துவம்,  மற்றும் உலகத் தமிழர்களை (இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள்) ஒன்றிணைக்கும் தமிழ் ஹிப் ஹாப்பின் இசை வலைப்பின்னல் மற்றும் சமுக வலைப்பின்னல் போன்ற விஷயங்ளைப் பற்றிய தகவல்களை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக   நான் செய்வதையும் நினைப்பதையும் இந்த இணையதளம் முலமாக உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.  நீங்களும் , உங்கள் கருத்துக்களையும் பிற செய்திகளையும்என்னோடு பகிர்ந்துகொள்ளலாம்.  பரஸ்பரப் பகிர்தலுக்கு இது  ஓர் அடித்தளம். இந்த இணையதளம்  அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறதனால்  இதில் எழுதப்படுவது    மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்கட்டும்   என்று நான் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

Vanakkam friends! As many of you already know, I have been living in Malaysia for the last year, conducting research for my dissertation in ethnomusicology at Wesleyan University, USA. My research focuses on the growth and development of Tamil hip hop, its modes of production and distribution, its lyrical themes and language,  its social, cultural, and economic significance within various diasporic communities, as well as the musical and social networks that connect Tamils globally (Malaysia, India, Ilangai, UK, Canada, Switzerland etc).  I am creating this blog in order to keep you informed of what I am doing/thinking, and also as a way of soliciting your feedback and responses to specific questions that I may have during the forthcoming months. Please be mindful that this is a public forum and that whatever you write may be read by others. Miga Nandri!